TV

6807407510_87e96e8176_b

புதுடெல்லி, 13.03.19:

இந்தியா ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி டெல்லி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி 5 பொட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் வென்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்த இந்திய அணி அடுத்தடுத்த 2 போட்டிகளில் தோல்வியடைந்தது. இதனால் 5 பொட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது 2-2 என்ற கணக்கில் சமனில் உள்ளது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் இன்று பிற்பகல் 1.30 மணிக்குத் தொடங்குகிறது. இந்த போட்டியில் வெல்லும் அணியே தொடரை வெல்லும் அணி என்பதால் இரு அணிகளும் வெற்றிக்கு தீவிரமாக போராடும்.

இந்திய அணியில் ஷிகர் தவான், ரோஹித் சர்மா, கேப்டன் கோலி ஆகியோர் பேட்டிங்கில் நல்ல ஃபார்மில் உள்ளனர். மேலும் இன்றைய போட்டியில் தோனி களமிறங்குவார் என தெரிகிறது. அதேபோல் ஆஸ்திரேலிய அணியும் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் நல்ல ஃபார்மில் உள்ளதால் இன்றைய போட்டி விறுவிறுப்பானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

இன்றைய போட்டியில் விராத் கோஹ்லி, தவான், ரோஹித் சர்மா, ராயுடு, ராகுல், தோனி, பும்ரா, சாஹல், குல்தீப் யாதவ், ஷமி, விஜய் சங்கர், ஆகியோர் விளையாடும் 11 பேர் அணியில் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply