TV

6807407510_87e96e8176_b

கோவை, 14.03.19:

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வலியுறுத்தி கோவை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும், தமிழக அரசு பெண்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் பாலியல் குற்றவாளிகள் மற்றும் காவல்துறையினருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்பைப் புறக்கணித்து கலந்து கொண்டனர். மேலும், ஆர்ப்பாட்டத்தில் பேசிய மாணவர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் பிரபாகரன் மற்றும் தினேஷ் கூறியதாவது :

பொள்ளாச்சியில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற குற்றங்களை அரசு நியாயமாக விசாரிக்க வேண்டும். அதேபோல, இந்த விசாரணையில் எந்த அரசியல் தலையீடும் இல்லாமல் பாரபட்சம் இன்றி குற்றவாளிகளை கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நியாயமான விசாரணைகள் நடைபெறும் வரை மாணவர்களாகிய நாங்கள் ஒவ்வொரு கட்டங்களாக, எங்களின் போராட்டங்களை தொடர்வோம், என தெரிவித்தனர்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply