TV

6807407510_87e96e8176_b

உசிலம்பட்டி, 15.03.19:

உசிலம்பட்டியில் வீட்டிலிருந்த போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி அ.ம.மு.கழக பேச்சாளர் பலியானார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கீழப்புதூர் ஒச்சாத்தேவர் தெருவைச் சேர்ந்தவர் ராஜாங்கம் மகன் செல்வம் (55). இவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பேச்சாளராக உள்ள நிலையில், இவருடைய இரு மகன்கள் சென்னையில் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் மனைவியை இழந்த செல்வம் கீழப்புதூரில் தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையிர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டிலிருந்த செல்வம் தொலைக்காட்சியை ஆன் பண்ண சென்ற எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். ஆனால் கதவு பூட்டிய நிலையில் இருந்ததால் வெளியில் யாருக்கும் தெரியவில்லை.  2 நாட்களுக்கு பின்பு வீட்டிற்குள் இருந்து தூர்நாற்றம் வந்ததால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், கதவை உடைத்து பார்த்த போது செல்வம் இறந்து கிடந்துள்ளார்.

இதனையடுத்து உடனடியாக போலிசாருக்கு தகவல் கொடுத்தையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் போலீசார் செல்வத்தின் உடலை மீட்டு  பிரேத பரிசோதனைக்கு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply