TV

6807407510_87e96e8176_b

வெலிங்டன், 15.03.19:

நியூசிலாந்தில் உள்ள மசூதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் வங்கதேச கிரிக்கெட் அணி வீரர்கள் நூலிழையில் தப்பியுள்ளனர். நியூசிலாந்திற்கு கிரிக்கெட் விளையாட சென்று இருக்கும் இவர்கள் இந்த துப்பாக்கி சூட்டில் சிக்காமல் தப்பித்துள்ளனர்.

நியூசிலாந்தில் சென்ட்ரல் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள மசூதியில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மசூதிக்குள் 300க்கும் மேற்பட்ட நபர்கள் தொழுகை செய்து கொண்டு இருக்கும் போது, இந்த தாக்குதல் நடந்துள்ளது. இந்த துப்பாக்கி சூட்டை நடத்திய நபரை இன்னும் பிடிக்க முடியவில்லை. மேலும் இந்த துப்பாக்கி சூட்டில் 6 பேர் பலியாகி உள்ள நிலையில், எத்தனை பேர் காயம் அடைந்தனர் என்ற விபரம் இன்னும் வெளியாகவில்லை. மேலும் இந்த துப்பாக்கி சூட்டில் இன்னும் பல பேர் பலியாகி இருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் வருகிறது.

இந்நிலையில் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வங்கதேச கிரிக்கெட் அணி இந்த துப்பாக்கி சூட்டில் இருந்து நூலிழையில் தப்பி இருக்கிறது. இந்த பகுதியில் அடுத்தடுத்து நிறைய மசூதிகள் உள்ள நிலையில், அதில் ஒரு மசூதியில் வங்கதேச அணி வீரர்கள் தொழுகை நடத்திக் கொண்டு இருக்கும் போது, இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது.

இந்நிலையில் துப்பாக்கி சூடு சத்தம் கேட்டதும் பாதுகாவலர்கள் உதவியுடன் வங்கதேச அணி வீரர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறினார்கள். இவர்கள் அங்கிருந்து வேகமாக வெளியேறும் வீடியோ வெளியாகி உள்ளது. மேலும் இவர்கள் யாருக்கும் எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply