TV

6807407510_87e96e8176_b

கோவை, 15.03.19:

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளி சபரிராஜன் வீட்டில் இன்று சிபிசி ஐ டி போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொள்ளாச்சியில் இளம் பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கில் திருநாவுக்கரசு , சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் கோவை மாவட்ட காவல் துறை உரிய விசாணை நடத்த வில்லை எனக்கோரியும், ஆளும் கட்சிக்கு தொடர்பு இருப்பதாக கூறி தமிழகம் முழுவதும் மாணவர்கள், மற்றும் பல அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த வழக்கு கடந்த 13 ஆம் தேதி சிபிசி ஐ டி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து சிபிசி ஐ டி ஐ ஜி மற்றும் காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் குற்றவாளிகள் பயன்படுத்திய பண்ணை வீட்டில் சோதனை நடைபெற்றது. தொடர்ந்து இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான திருநாவுவுக்கரசு வீட்டில் நேற்று அதிகாரிகள் நான்கு மணி நேரம் சோதனை செய்ததில் லேப்டாப் , பென் டிரைவ் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச்சென்றனர்.

இதனையடுத்து இன்று பொள்ளாச்சி ஜோதி அருகே உள்ள ஏம் ஜீ ஆஆர் நகரிலுள்ள சபரிராஜன் வீட்டில் சிபிசி ஐ டி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply