TV

6807407510_87e96e8176_b

உசிலம்பட்டி, 15.03.19:

உசிலம்பட்டி அருகே பெருமாள்கோவில்பட்டியில் கிணற்றில் தவறி விழுந்து ஆட்டு வியாபாரி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருமாள்கோவில்பட்டியைச் சேர்ந்த பெரியன்னன் மகன் ராஜேஷ்குமார்(31). இவர் அப்பகுதியில் ஆட்டு வியாபாரம் செய்து வந்த நிலையில், இன்று காலையில் தனது ஆட்டுக்குட்டி இறைக்காக வேப்பங்குச்சியை வெட்டுவதற்காக கிணற்றுப்பகுதியில் இறங்கியுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்த ராஜேஷ்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். இதனையடுத்து அங்கம்பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உத்தப்பநாயக்கணூர் போலீசார் ராஜேஸ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு
மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்வபம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply

Your email address will not be published.