TV

6807407510_87e96e8176_b

16.03.19:

ஒவ்வொரு நட்சத்திரத்துக்கான கடவுள் யார்? அந்த நட்சத்திரத்தில் அவதரித்த வழிபாட்டுக்குரியவர், வணக்கத்துக்குரியவர், அழியாப்புகழ் பெற்றவர் யார் யார் தெரியுமா? இதோ…

அஸ்வினி:

இந்த நட்சத்திரத்தில் அஸ்வத்தாமன் தோன்றினார். இந்த நட்சத்திரத்தின் அதிர்ஷ்ட தெய்வம் ஸ்ரீசரஸ்வதி தேவி.

பரணி:

இதில் துரியோதனன் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிர்ஷ்ட தெய்வம் ஸ்ரீதுர்கா தேவி.

கிருத்திகை:

கிருத்திகை நட்சத்திரத்தில் முருகப்பெருமான் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிர்ஷ்ட தெய்வம் அவரே.

ரோகிணி:

இந்த நட்சத்திரத்தில் கிருஷ்ணன் மற்றும் பீமசேனன் பிறந்துள்ளனர். இந்த நட்சத்திரத்தின் அதிர்ஷ்ட தெய்வம் ஸ்ரீகிருஷ்ணன்.

மிருகசீரிடம்:

இதில் புருஷமிருகம் பிறந்துள்ளது. இந்த நட்சத்திரத்தின் அதிர்ஷ்ட தெய்வம் சிவ பெருமான்.

திருவாதிரை:

திருவாதிரை நட்சத்திரத்தில் கருடன், ருத்ரன், ஆதிசங்கரர் மற்றும் ராமானுஜர் பிறந்துள்ளனர். இந்த நட்சத்திரத்தின் அதிர்ஷ்ட தெய்வம் சிவபெருமான்.

புனர்பூசம்:

புனர்பூசம் நட்சத்திரத்தில் ராமன் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிர்ஷ்ட தெய்வம் ஸ்ரீராமர்.

பூசம்:

பூசம் நட்சத்திரத்தில் பரதன் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிர்ஷ்ட தெய்வம் ஸ்ரீதட்சிணாமூர்த்தி.

ஆயில்யம்:

ஆயில்யம் நட்சத்திரத்தில் தர்மராஜா, லக்ஷ்மணன், சத்ருகணன் மற்றும் பலராமன் பிறந்துள்ளனர். இந்த நட்சத்திரத்தின் அதிர்ஷ்ட தெய்வம் ஸ்ரீஆதிசேசன் .

மகம்:

மகம் நட்சத்திரத்தில் சீதை, அர்ச்சுணன் மற்றும் எமன் தோன்றியுள்ளனர். இந்த நட்சத்திரத்தின் அதிர்ஷ்ட தெய்வம் ஸ்ரீசூரிய பகவான்.

பூரம்:

பூரம் நட்சத்திரத்தில் பார்வதி, மீனாட்சி மற்றும் ஆண்டாள் பிறந்துள்ளனர். இந்த நட்சத்திரத்தின் அதிர்ஷ்ட தெய்வம் ஸ்ரீஆண்டாள் தேவி.

உத்திரம்:

உத்திரம் நட்சத்திரத்தில் மகாலக்ஷ்மி மற்றும் குரு பிறந்துள்ளனர். இந்த நட்சத்திரத்தின் அதிர்ஷ்ட தெய்வம் ஸ்ரீமகாலட்சுமி தேவி.

அஸ்தம்:

அஸ்தம் நட்சத்திரத்தில் நகுலன், சகாதேவன், லவ, குசன் பிறந்துள்ளனர். இந்த நட்சத்திரத்தின் அதிர்ஷ்ட தெய்வம் ஸ்ரீகாயத்ரி தேவி.

சித்திரை:

சித்திரை நட்சத்திரத்தில் வில்வ மரம் பிறந்துள்ளது. இந்த நட்சத்திரத்தின் அதிர்ஷ்ட தெய்வம் ஸ்ரீசக்கரத்தாழ்வார்.

சுவாதி:

சுவாதி நட்சத்திரத்தில் நரசிம்மர் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிர்ஷ்ட தெய்வம் ஸ்ரீநரசிம்மமூர்த்தி.

விசாகம்:

விசாகம் நட்சத்திரத்தில் கணேசர் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிர்ஷ்ட தெய்வம் ஸ்ரீமுருகப் பெருமான்.

அனுஷம்:

அனுஷம் நட்சத்திரத்தில் நந்தனம் பிறந்துள்ளது. இந்த நட்சத்திரத்தின் அதிர்ஷ்ட தெய்வம் ஸ்ரீலட்சுமி நாராயணர்.

கேட்டை:

கேட்டை நட்சத்திரத்தில் தர்மன் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிர்ஷ்ட தெய்வம் ஸ்ரீவராஹ பெருமாள்.

மூலம்:

மூலம் நட்சத்திரத்தில் அனுமன் மற்றும் ராவணன் பிறந்துள்ளனர். இந்த நட்சத்திரத்தின் அதிர்ஷ்ட தெய்வம் ஸ்ரீஆஞ்சநேயர்.

பூராடம்:

பூராடம் நட்சத்திரத்தில் பிரகஸ்பதி பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிர்ஷ்ட தெய்வம் ஸ்ரீஜம்புகேஸ்வரர்.

உத்திராடம்:

உத்திராடம் நட்சத்திரத்தில் சல்யன் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிர்ஷ்ட தெய்வம் ஸ்ரீவிநாயகப் பெருமான்.

திருவோணம்:

திருவோணம் நட்சத்திரத்தில் வாமனன், விபீசனன் மற்றும் அங்காரகன் பிறந்துள்ளனர். இந்த நட்சத்திரத்தின் அதிர்ஷ்ட தெய்வம் ஸ்ரீஹயக்கிரீவர்.

அவிட்டம்:

அவிட்டம் நட்சத்திரத்தில் துந்துபி வாத்தியம் பிறந்துள்ளது. இந்த நட்சத்திரத்தின் அதிர்ஷ்ட தெய்வம் ஸ்ரீஅனந்த சயனப் பெருமாள்.

சதயம்:

சதயம் நட்சத்திரத்தில் வருணன் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிர்ஷ்ட தெய்வம் ஸ்ரீமிருத்யுஞ்ஜேஸ்வரர் .

பூரட்டாதி:

பூரட்டாதி நட்சத்திரத்தில் கர்ணன், மற்றும் குபேரன் பிறந்துள்ளனர். இந்த நட்சத்திரத்தின் அதிர்ஷ்ட தெய்வம் ஸ்ரீஏகபாதர்.

உத்திரட்டாதி:

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் ஜடாயு மற்றும் காமதேனு பிறந்துள்ளன. இந்த நட்சத்திரத்தின் அதிர்ஷ்ட தெய்வம் ஸ்ரீமகாஈஸ்வரர்.

ரேவதி:

ரேவதி நட்சத்திரத்தில் அபிமன்யு மற்றும் சனிபகவான் பிறந்துள்ளனர். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீரங்கநாதன்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply

Your email address will not be published.