TV

6807407510_87e96e8176_b

கோவை, 16.03.19:

கோவையில் வேலை வாய்ப்பு முகாம் நேர்முகத்தேர்வில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை பொள்ளாச்சி சாலையில் உள்ள ரத்தினம் கல்லுாரியில் மெகா வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் , 10ம் வகுப்பு , பிளஸ் 2 , டிப்ளமோ , பொறியியல் உட்பட அனைத்து டிகிரி முடித்தவர்களுக்கு உரிய வேலை வாய்ப்பை அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டன. குறிப்பாக ஏவியான் இன்போடெக் , ஐ .டி. பி.ஐ, ஈக்விடாஸ் உட்பட, 40 க்கும் மேற்பட்ட நிறுவனத்தினர் பங்கேற்று, வேலை வாய்ப்பிற்கான நேர்முக தேர்வை நடத்தியிருந்தனர்.

இந்நிலையில் இந்த நேர்முகத்தேர்வில் தேர்ச்சி பெற்ற இரத்தினம் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா கல்லூரி அரங்கில் நடைபெற்றது. கல்லூரி குழுமத்தின் தலைவர் மதன் செந்தில் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் முதன்மை செயல் அதிகாரி மாணிக்கம் முன்னிலை வகித்தார். தொடர்ந்து விழாவில் சிறப்பு விருந்தினராக பாரதியார் பல்கலைகழகத்தின் பாடநெறி ஒருங்கிணைப்பாளர், முனைவர் பத்மநாபன் கலந்து தேர்வில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

பின்னர் அவர்,பேசுகையில், தற்போது கல்லூரி படிப்பை முடித்து மாணவ,மாணவிகள் நல்ல வேலைகளை பெற கல்லூரியில் பயிலும் போதே தங்களது தலைமை பண்பு,குழு திறன் செயல்பாடு மற்றும் நவீன தொலை தொடர்பு துறை சார்ந்த திறமைகளை வளர்த்தி கொள்ள வேண்டும் என தெரிவித்தார். தொடர்ந்து விழாவின் ஒரு பகுதியாக கடந்த கல்வியாண்டில் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ,மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. விழாவில் மாணவ,மாணவிகளின் பெற்றோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply

Your email address will not be published.