TV

6807407510_87e96e8176_b

கிருஷ்ணகிரி, 16.03.19:

கிருஷ்ணகிரி அனந்த் நாக்பூரில் நடைபெற்ற தேசிய அளவிலான புறாக்கள் பந்தயத்தில் 52 மணி நேரத்தில் ஆயிரம் கிமீ தூரத்தை கடந்து வந்த ஒசூர் புறா, தேசிய அளவில் 12வது இடம், தமிழக அளவில் 4 இடம் பெற்று சாதனை படைத்துள்ளது.

கடந்த 10ஆம் தேதி மகாராஷ்ரா மாநிலம் நாக்பூரில் தேசிய அளவிலான புறாக்கள் பந்தயம் நடைபெற்றது. இந்த பந்தயத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து கொண்டு செல்லப்பட்ட புறாக்கள் பங்கு பெற்றன. தமிழகத்தில் சென்னை, சேலம், ஒசூர், திருச்சி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 90 புறாக்களும், கர்நாடகா மாநிலத்திலிருந்து 100 புறாக்களும் இந்த போட்டியில் பங்கேற்றன.

கடந்த 10ஆம் தேதி நாக்பூரில் காலை 07.05 மணிக்கு போட்டிகள் துவக்கப்பட்டு புறாக்கள் அனைத்தும் பறக்க விடப்பட்டன. இந்த போட்டிகளில் ஒசூர் பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் தாண்டவமூர்த்தி என்பவரின் புறா உட்பட மொத்தம் 6 புறாக்கள் பங்கு பெற்றன. இதில் தாண்டவமூர்த்தியின் புறா நாக்பூரிலிருந்து 52 மணி நேரத்தில் ஆயிரம் கிமீ தூரத்தை கடந்து இன்று மதியம் 1.30 மணியளவில் ஒசூரிலுள்ள அவரது வீட்டிற்கு வந்து சேர்ந்தது.

இந்த பந்தய போட்டிகளில் தாண்டவமூர்த்தியின் புறா தேசிய அளவில் 12வது இடத்தையும், தமிழக அளவில் 4வது இடத்தையும், ஒசூர் அளவில் முதல் இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளது. வெற்றி பெற்ற புறா உரிமையாளர் தாண்டவமூர்த்தியை ஒசூர் புறா பந்தய போட்டியாளர்கள் சங்கத்தினர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து 4 ஆண்டுகளாக இவரது புறாக்கள் வெற்றி பெற்று சாதனை படைத்து வருகிறது.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply