TV

6807407510_87e96e8176_b

உசிலம்பட்டி, 16.03.19:

உசிலம்பட்டி அருகே வாலிபர் விஷம்குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்;.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வி.பெருமாள்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் மகன் அருண்குமார் (21). தனியார் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வரும் இவர், இன்று தனது தோட்டத்தில் விவசாயத்திற்கு பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் தனது தோட்டத்தில் கிடந்துள்ளார்.

இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அருண்குமாரை சிகிச்சைக்காக மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அருண்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அருண்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த உசிலம்பட்டி தாலுகா போலிசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply