TV

6807407510_87e96e8176_b

சென்னை, 16.03.19:

இந்தியா அளவில் சி ஆர் ஏ மோட்டர் ரேசிங் சார்பாக இரண்டு நாள் பைக் ரேஸிங் குறித்த பயிற்சி முகாமானது சென்னையில் நடைபெற்றது.

சி ஆர் ஏ மோட்டர் ரேசிங் என்ற அமைப்பின் சார்பாக வருடந்தோறும் 100க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு, இந்தியா முழுவதும் பைக் ரேசில் கலந்துகொள்வதற்கான பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதே போல் இந்த வருடமும் ரேஸில் 18 வயது முதல் 70 வயது வரை உள்ளவர்கள் கலந்து கொண்ட ரெஷிங் நடைபெற்றது. சென்னையில் உள்ள மெட்ராஸ் மோட்டார் ரேஸில் நடைபெற்ற, இப்பயிற்சியில் பதினெட்டு வயதுக்கு கீழ் இருப்பவர்கள் பெற்றோருடன்  கலந்து கொண்டனர்.

இதில் இரண்டு நாட்கள் பைக் ஒட்டுவது குறித்து செயல்முறை மற்றும் பாடம் சம்பந்தமாக பயிற்சிகள் வழங்கப்பட்டது. இப்பயிற்சியில் கலந்து கொண்டவர்கள் பைக் ரேசில் கலந்துகொள்வதற்கான ஒட்டுநர் உரிமம் பெறுவதற்கு உதவியாக இருப்பதாகவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையில் ரேஸ் ஓட்டி சென்று விபத்து ஆக்குவதை தவிர்த்து இதற்கான பயிற்சி பள்ளியில் சேர்ந்து பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று பயிற்சி ஆசிரியரான தருண் அவர்கள் தெரிவித்தார்.

மேலும் பயிற்சி பெற்றவர்கள் தேசிய அளவில் போட்டிகளில் பங்குபெறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கி தருவதாக தெரிவித்தார். இந்த பயிற்சியில் டெல்லி,சிம்லா கல்கத்தா,மும்பை பூனே,உள்ளிட்ட பகுதியில் இருந்து ஆண்கள் ,பெண்கள் என 50க்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply