TV

6807407510_87e96e8176_b

புதுடெல்லி, 17.03.19:

பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் தனது பெயரை பாதுகாவலன் நரேந்திர மோடி மாற்றிக் கொண்டதை தொடர்ந்து, பாஜக தலைவர்களும் தங்களது பெயரை மாற்றிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அனைத்து அரசியல் கட்சிகளும், தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் களமிறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக பாஜகவினர் நான் உங்கள் காவலன் என்ற பிரசாரத்தை தொடங்கியுள்ளனர். கடந்த சனிக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி இதை தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் கூறுகையில் நான் உங்கள் பாதுகாவலன். நான் தனித்து போட்டியிடவில்லை. நீங்கள் அனைவரும் நாட்டின் பாதுகாவலர்கள்தான் என்ற உறுதிமொழியை ஏற்க வேண்டும். ஊழலுக்கு எதிராக போராடும் அனைவரும் பாதுகாவலர்களே என்று பேசியிருந்தார்.

இதையடுத்து டுவிட்டரில் தனது பெயருடன் பாதுகாவலன் என்ற அடைமொழியை சேர்த்து கொண்டார். இவரை பின்பற்றி அமித்ஷா, பியூஷ் கோயல், தமிழிசை சவுந்திரராஜன் ஆகியோரும் தங்கள் பெயருக்கு முன்பு சவுக்கிதார் (பாதுகாவலன்) என்ற வார்த்தையை சேர்த்துக் கொண்டுள்ளனர். இதனால் டுவிட்டரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply

Your email address will not be published.