TV

6807407510_87e96e8176_b

கோவை, 19.03.19:

கோவை அருகே உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்து வரப்பட்ட 10 இலட்சத்து 64 ஆயிரம் ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவை மாவட்டம் மதுக்கரை மரப்பாலம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பாலக்காடு – கோவை சாலையில் வந்த கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த அபிலாஷ் என்பவரின், காரை நிறுத்திய பறக்கும் படை அதிகாரிகள், சோதனை செய்தனர். அப்போது காரில் 10 இலட்சத்து 64 ஆயிரம் ரூபாய் பணம் இருந்தது தெரியவந்தது.

இது குறித்து அபிலாஷிடம் விசாரித்தபோணத இந்த தனது நண்பர் மெர்வின் என்பவருக்கு கொடுத்து திரும்ப பெற்ற 10 லட்ச ரூபாய் பணம் மற்றும் அவரிடம் இருந்த 64 ஆயிரம் பணத்தோடு கோவையில் உள்ள தனது நண்பரை பார்க்க வந்ததாக தெரிவித்துள்ளார். இருப்பினும் உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். உரிய ஆவணங்களை அளித்து பணத்தை திரும்ப பெறலாம் என கூறியுள்ள அதிகாரிகள், பறிமுதல் செய்த பணத்தை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply

Your email address will not be published.