TV

6807407510_87e96e8176_b

19.03.19:

வாங்குவோர் எண்ணிக்கை மிகவும் குறைந்ததால் மாருதி கார் நிறுவனம் தனது காலாண்டு உற்பத்தியை கணிசமாக குறைத்துள்ளது.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்களில் முதலாம் இடத்தை மாருதி பிடித்து வந்தது. அப்போது மாருதி கார்களுக்கு இந்தியாவில் நல்ல மவுஸ் இருந்தது. குறிப்பாக முதல் கார் வாங்குபவர்கள் மாருதியை பெரிதும் விரும்பி வாங்கினர்.

சமீபகாலமாக கார் வாங்குபவர்கள் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து வரும் நிலையில், முதல் கார் வாங்குவோர் பலரும் பெரிய கார்களை வாங்க தொடங்கியுள்ளனர். இதனால் சந்தையில் மாருதியின் விற்பனை பெரிதும் குறைந்துள்ளது. இதால் மாருதி நிறுவனம் தனது கார் உற்பத்தியை கணிசமாக குறைத்துள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் முதல் ஜுன் வரையிலான காலாண்டு காலத்தில் 1,72,000 கார்கள் உற்பத்தி செய்யப்பட்டிருந்தன. இந்த ஆண்டு இதே கால கட்டத்தில் 1,26,000 மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இது சென்ற ஆண்டோடு ஒப்பிடுகையில் 26.8% குறைவாகும். கடந்த 4 வருடங்களில் இந்த கார் நிறுவன உற்பத்தி இரு மடங்கு அதிகரித்திருந்தது. தற்போது நான்கின் ஒரு பங்குக்கும் மேல் குறைந்துள்ளது



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply