TV

6807407510_87e96e8176_b

கோவை, 19.03.19:

பொள்ளாச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மிரட்டி வெளிநாட்டிற்கு விற்பனை செய்யப்படாடதாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கூறியதாவது:

வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் மட்டும் அல்ல, 5 ஆண்டுகளாக மத்தியிலும், மாநிலத்திலும் மக்கள் துயரை ஒரே நாளில் மாற்றும் தேர்தல். கடந்த 5 ஆண்டுகளாக மக்களும், எந்த தொழிலை சார்ந்தவர்களும் மகிழ்ச்சியாக இல்லை, இலட்சக்கணக்கனோர் வேலை இழந்துள்ளனர். அதிமுக தேர்தல் அறிக்கையில் மந்தமாக உள்ள தொழில் துறையை முன்னேற்ற நடவடிக்கை எடுப்போம் என கூறியிருப்பதன் மூலம், தொழில் மந்தமாக உள்ள உண்மையை அதிமுகவினரே ஒப்புக்கொண்டுள்ளனர்.  ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டுமென்பதை அவர்களே ஒப்புக்கொண்டுள்ளனர்.

கருத்து கணிப்புகள், மக்கள் எண்ணத்தை பிரதிபலிப்பதாக உள்ளது, அதற்கேற்ப 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பெண்களுக்கு பாதுகாப்பானவர் என்ற நிலையில் இருந்தார். அமைச்சர்கள் குற்றம் செய்தாலும் இரவோடு, இரவாக மாற்றியவர், பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் மக்களே குற்றவாளிகளை பிடித்து காவல்துறையிடம் கொடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குற்றவாளிகளை பாதுகாக்க அரசு முயல்கிறது, போராடும் மாணவர்களை கைது செய்யும் காவல் துறை, குற்றவாளிகள் வீட்டிற்கு காவல் காக்கிறார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர் பணம் தான் முக்கியம் என பெண்கள் மானத்தை விற்பனை செய்வது வெட்கமாக உள்ளது எனவும், சென்னையில் கொங்கு நாட்டுக்காரர்களை கேவலமாக பார்க்கிறார்கள் எனவும், பொள்ளாச்சியில் 100 க்கும் மேற்பட்ட பெண்கள் மிரட்டி வெளிநாட்டிற்கு விற்கப்பட்டுள்ளார்கள் எனவும், புகாரளித்தவர்களிடம் இருந்து வீடியோ ஆதாரங்களை டிஜிபி, உள்துறை வாங்கவில்லை எனவும் கூறிய அவர், இவ்வழக்கில் காவல் துறை சொல்வது அத்தனையும் பொய்யென தெரிவித்தார்

ஆட்சியில் இருந்து செய்யாததை செய்யுவோம் என அதிமுக தேர்தல் அறிக்கையில் சொல்வது நகைப்புக்குரியது எனவும், 5 ஆண்டுகளுக்கு முன்னர் சொன்னது எதையும் செய்யாத பாஜகவிற்கு தொழில்துறையினர் எதிராக வாக்களிப்பார்கள் எனவும் அவர் கூறினார்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply