TV

6807407510_87e96e8176_b

தூத்துக்குடி 19-03-19
தூத்துக்குடியில் ரயிலில் அடிப்பட்டு சிறப்பு காவல்துறை உதவி ஆய்வாளர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது விபத்தில் உயிரிழந்தாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு பகுதியை சேர்ந்தவர் மால்கம் பர்னான்டோ. தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி காவல்நிலையத்தில் சிறப்பு காவல்துறை உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் இவருக்கு திருமணமாகி மேகலா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இவரது மனைவி மேகலா தூத்துக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் இன்று தூத்துக்குடி வி.எம்.எஸ் நகர் பகுதியில் ரயில் தண்டவாளம் அருகே ஒருவர் அடிபட்டு உயிரிழந்த நிலையில் ஒருவர் கிடப்பதாக அப்பகுதியை சேர்ந்தவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலின் அடிப்படையில் தூத்துக்குடி சிப்காட் மற்றும் ரயில்வே போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்த சென்று பார்த்தபோது, ரயிலில் அடிப்பட்டு உயிரிழந்தவர் சிறப்பு காவல்துறை உதவி ஆய்வாளர் மால்கம் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மேலும் இவரது இருச்சக்கர வாகனம் அப்பகுதியில் நிறுத்திவிட்டு சென்றுள்ளது தெரியவந்ததை தொடா்ந்து, ரயில் தண்டவாளத்தை கடக்கும்போது உயிரிழந்தரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து சிப்காட் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply