TV

6807407510_87e96e8176_b

திண்டிவனம், 20.03.19:

மக்களவை தேர்தல் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தங்களது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை முடித்து, தற்போது அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன.

இந்நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவுக்கு கள்ளக்குறிச்சி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அந்த தொகுதியில் தேமுதிகவின் இளைஞர்அணி செயலாளர் சுதிஷ் வேட்பாளாக போட்டியிடுகிறார். மேலும் இந்த தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பொன்முடி மகன் கௌதம்சிகாமணி போட்டியிடுகிறார்.

இந்நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவின் நிறுவனர் ராமதாசை தைலாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளரும், தேமுதிக இளைஞரணி தலைவருமான சுதீஷ் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்பின்போது தேமுதிகவின் வட சென்னை தொகுதி வேட்பாளர் மோகனராஜ் உடன் இருந்தார்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply