TV

6807407510_87e96e8176_b

காஞ்சிபுரம், 20.03.19:

காஞ்சிபுரத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகபிரசவத்தின்போது போது குழந்தையின் தலை துண்டானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செல்லமுத்து என்பவரின் மகள் பொம்மி என்ற பெண்ணுக்கு இன்று பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் கூவத்தூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அழைத்து செல்லப்பட்டார். ஆனால் அந்த மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததால், பணியில் இருந்த செவிலியர் பிரசவம் பார்த்துள்ளனர்.

அப்போது பொம்மிக்கு சுகப்பிரசவமாக நடைபெற இருந்த நிலையில், குழந்தை முழுமையாக வெளியே வரும் முன்பே, அலட்சிய உணர்வோடு செவிலியர் குழந்தையின் தலையை மட்டும் பிடித்து வெளியே இழுத்துள்ளார். இதில் குழந்தையின் தலை துண்டான நிலையில், குழந்தையின் உடல் மற்றும் கால் பாகங்கள், தாயின் வயிற்றில் சிக்கிக்கொண்டது. இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவமனை நிர்வாகம், பொம்மியை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அங்கு பொம்மிக்கு தீவிர சிகிச்சைக்கு அளிக்கப்பட்டதை தொடர்ந்து, அறுவை சிகிச்சை மூலம் குழந்தையின் உடல் மற்றும் தலை பாகங்கள் தாயின் வயிற்றில் இருந்து வெளியே எடுக்கப்பட்டுள்ளது. தற்போது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுமார் 30 கிராம மக்களுக்கு பயன்படும் ஆரம்ப சுகாதார மையத்தில் இரவு நேரத்தில் ஒரு மருத்துவர்கள் கூட இல்லாததே இதற்கு காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply

Your email address will not be published.