TV

6807407510_87e96e8176_b

கோவை, 20.03.19:

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அபாண்டமானவை என பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த துணைசபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறியதாவது:

நான் ஊடகத்தினரிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். என் மீதும், என் குடும்பத்தினர் மீதும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிற்கு, குற்றச்சாட்டு சுமத்தியவர்களிடம் இருந்து என்ன ஆதாரம் உள்ளது என்று கேட்டீர்களா?. பாதிக்கப்பட்டு புகார் கொடுத்த பெண், மற்றும் அந்த பெண்ணின் அண்ணன் ஆகியோர் என் தொடர்பாக நன்முறையில் வெளியிட்ட ஆடியோ, வீடியோவை முழுமையாக அடுத்தடுத்து ஒளிபரப்பு செய்யாமல், மறைக்கப்பட்டுள்ளது.

மேலும் என் பிள்ளைகள் வெளிநாட்டிற்கு தப்பிவிட்டதாக பல வதந்திகள் பரவி வருகிறது. அதற்கு பதில் சொல்ல விரும்புகிறேன். என் பிள்ளைகள் அவர்களது பணிகளை செய்து வருகின்றனர். அதனால் ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டை பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி அதிமுக செய்யும். மேலும் இந்த தகவல் பொய் என்று ஆரம்பத்திலிருந்து பொள்ளாச்சி மக்களுக்கு தெரியும். அரைக்கால் சட்டை போட்டதிலிருந்து அந்த பகுதி மக்கள் என் பற்றியும், என் குடும்பத்தினரும் பற்றி தெரியும்.

4 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளேன், 5 முறை தேர்தலில் போட்டியிட்டுள்ளேன். என்னை நன்றாக தெரியும். இது பொய் என்பதால், அதிமுக மீது அபாண்டமாக சுமத்தப்பட்ட பழி என்பதால் இந்த தேர்தலில் கூடுதல் வாக்குகள் பெற்று வெற்றிப்பெறுவோம். நான் கொடுத்த புகாரின் அடிப்படையில் உண்மை தன்மை குறித்து சிபிசிஐடி காவல்துறையினர் என்னிடம் விசாரித்தனர். என்னிடம் உள்ள ஆதாரங்களை கொடுத்துள்ளேன்.

திமுகவில் யாரும் தவறு செய்ததில்லையா? ஒருவர் தவறு செய்தால் அதற்கு ஸ்டாலின் தான் பொருப்பாக முடியுமா? 1.5 கோடி தொண்டர்கள் கொண்ட அதிமுகவில் ஒருவர் செய்தால் அதற்கு தலைமை எப்படி பொறுப்பு ஏற்கும்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply

Your email address will not be published.