TV

6807407510_87e96e8176_b

யாழ்பானம், 30.03.19:

யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்திற்கு லைக்காவின் ஞானம் அறக்கட்டளை சார்பில், நவீன வசதிகளுடன் கூடிய கட்டடம் வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

கடந்த 1979ம் ஆண்டு இலங்கை யாழ்ப்பாணத்தில், 65 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது யாழ். பல்கலைக்கழகம். இதன் மருத்துவக்கல்லூரி, தற்போது 937 மாணவர்கள் கல்வி கற்கும் அளவில் வளர்ச்சியடைந்துள்ளது. ஆண்டுதோறும் இங்கு சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தபோதிலும், அவர்கள் வசதியாக கற்கும் வகையில் விரிவுரை மண்டபம், விஞ்ஞான பீடம், வகுப்பறை இருப்பிட வசதி போன்ற அடிப்படை வசதிகள் இடம்பெற்றிருக்கவில்லை.

இந்நிலையில், யாழ்.பல்கலைக்கழகத்தின் மருத்துவக்கல்லூரிக்கு நவீன வசதிகளுடன் கூடிய ஆறு மாடிகள் கொண்ட கட்டடம் ஒன்றை கட்டிக் கொடுக்க லைக்காவின் ஞானம் அறக்கட்டளை அனுமதி கேட்டிருந்தது. அத்துடன், இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும், அதற்கான உடன்படிக்கையை மேற்கொள்வதற்கும், நகர திட்டமிடல் நீர் விநியோகம் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம், அரசிடம் அறிக்கை சமர்ப்பித்திருந்தார்.

இந்நிலையில், இந்த திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதையடுத்து, லைக்காவின் ஞானம் அறக்கட்டளை சார்பில், 74 கோடி ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் கூடிய கட்டடம் ஒன்று, விரைவில் யாழ்.பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் நிர்மாணிக்கப்படவுள்ளது.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply