TV

6807407510_87e96e8176_b

சென்னை, 05.04.19:

இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவான வர்மா படம் கைவிடப்பட்டதை, தொடர்ந்து பாலா தனது அடுத்த படத்தை அறிவித்துள்ளார். இந்த படத்தில் ஆர்யா மற்றும் அதர்வா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவான படம் வர்மா. விக்ரமின் மகன் துருவ் நாயகனாக அறிமுகமான இந்த படம் தெலுங்கில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற அர்ஜீன் ரெட்டி படத்தில் ரீமேக் ஆகும். ஆனால் இந்த படத்தில் உருவாக்கம் தயாரிப்பாளருக்குப் பிடிக்காதக் காரணத்தால் படம் கிடப்பில் போடப்பட்டது. மேலும் இந்த படத்தை வேறொரு இயக்குநரை வைத்து மீண்டும் புதிதாக எடுத்து வருகின்றனர். இந்திய சினிமாவிலேயே முதல் முறையாக ஒரு படம் முழுவதும் முடிந்து கிடப்பில் போடப்பட்டுள்ளது இதுவே முதல்முறையாகும்.

இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த இயக்குனர் பாலா, தற்போது தனது அடுத்தப் படத்திற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. மேலும் தனது அடுத்த படத்திற்காக  பாலா, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்ப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டு நடக்கும் நிகழ்வுகளை கவனித்து வந்ததாகவும் செய்திகள் வெளியானது.

இந்நிலையில் தற்போது பாலா இயக்கப்போகும் திரைப்படத்தில் யார் நடிக்கப்போவது எனக் கேள்விகள் எழுந்துள்ள நிலையில், ஆர்யா மற்றும் அதர்வா ஆகியோர் நடிக்க இருப்பதாகவும், படத்துக்கு ஜி வி பிரகாஷ்குமார் இசையமைக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆர்யா நான் கடவுள் மற்றும் அவன் இவன் ஆகிய படங்களிலும், அதர்வா பரதேசி படத்திலும் பாலா இயக்கத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply

Your email address will not be published.