TV

6807407510_87e96e8176_b

சென்னை, 09.0419:

லைக்கா புரொடக்‌ஷன்ஸ் பிரமாண்ட தயாரிப்பில், ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் ஃபர்ஸ்ட லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

லைக்கா புரொடக்‌ஷன்ஸ் பிரமாண்ட தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த் – எமி ஜாக்சன், அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவான படம் 2.0. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 28ம் தேதி வெளியான இந்தப் படம் வசூலில் சாதனை படைத்தது.

இதைத் தொடர்ந்து, ரஜினிகாந்த் மீண்டும் லைக்கா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ‘தர்பார்’ என பெயர் சூட்டப்பட்டுள்ள இதன் படப்பிடிப்பு மும்பையில் இன்று தொடங்குகிறது.

இந்தப் படத்தில், ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நயன்தாரா இதற்கு முன்னர், ‘சந்திரமுகி’, ‘சிவாஜி’, ‘குசேலன்’ ஆகிய படங்களில் ரஜினியுடன் நடித்துள்ளார்.

‘தர்பார்’ படத்தின் ஃபர்ஸ்ட லுக் போஸ்டரை, லைக்கா புரொடக்‌ஷஷன்ஸ் நிறுவனம் இன்று (9ம் தேதி) காலை 8.30 மணிக்கு வெளியிட்டது. வரும் 2020ம் ஆண்டு தைப்பொங்கல் தினத்தன்று, ‘தர்பார்’ திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளது.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply

Your email address will not be published.