TV

6807407510_87e96e8176_b

புதுடெல்லி, 10.04.19:

“2014 லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தின்போது, மக்களின் வங்கிக் கணக்கில் 15 லட்சம் ரூபாய் செலுத்துவதாக பா.ஜ.க சொல்லவில்லை” என, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது;

மக்களின் வங்கிக் கணக்கில் 15 லட்சம் ரூபாய் செலுத்துவதாக ஒருபோதும் நாங்கள் சொல்லவில்லை. கறுப்பு பணத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்போம். இந்திய மக்கள் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் செலுத்தும் அளவிலான கறுப்பு பணம் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவின் பொருளாதாரம் சரிவடைந்துள்ளது என்றுதான் கூறினோம்.

பாலகோட் சர்ஜிக்கல் ஸ்டிரைக் பற்றி அரசிடம் கேளுங்கள். அதற்கான ஆதாரங்கள் பற்றி பாதுகாப்பு படையிடம் கேட்காதீர்கள். நாட்டின் உள்துறை அமைச்சர் என்ற முறையில் நான் சொல்கிறேன், பாலகோட்டில் நடத்தப்பட்ட தாக்குதல் உளவுத்துறை அளித்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்டது. பிப்ரவரி 26ம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் பயங்கரவாத முகாம்கள் மட்டுமே அழிக்கப்பட்டது. பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. எந்த ஒரு அப்பாவி மக்கள் மீதும் நாங்கள் தாக்குதல் நடத்தவில்லை. பாகிஸ்தானின் ‘எஃப் 16’ ரக விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கான ஆதாரமும் நேற்று அளிக்கப்பட்டுள்ளது.

வருமான வரித்துறையும், அமலாக்கத்துறையும் தன்னாட்சி அதிகாரம் பெற்றவை. அவர்கள் சோதனை நடத்துவது துறை சார்ந்த விவகாரம். தேர்தல் விதிகளுக்கு இது உட்படாது. அவர்களின் சோதனையில் எந்த அரசியல் தலையீடும் இல்லை. அப்படி இருக்கையில், அவற்றை நாங்கள் எவ்வாறு தடுக்க முடியும்..?  இந்த சோதனைகளுக்கு அரசை பொறுப்பாக்குவது தவறானது. அவர்களின் உளவுத்துறை பிரிவு அளித்த தகவல் படி சோதனை நடத்தப்படுகிறது. கணக்கில் வராத பணம் தேர்தலில் பயன்படுத்தப்படுவதை தடுக்கவே அவர்கள் சோதனை நடத்துகிறார்கள்” என்றார்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply