TV

6807407510_87e96e8176_b

ராமேஸ்வரம், 10.04.19:

‘எல்லை தாண்டி மீன்பிடிப்பில் ஈடுபட்டனர்’ எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை, வரும் 16ம் தேதி வரை காவலில் வைக்குமாறு இலங்கை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 8ம் தேதி ராமேஸ்வரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 2,500க்கும் அதிகமான மீனவர்கள் 562 விசைப்படகுகளில் கடலுக்கு சென்றனர். இவர்களில் ஒரு தரப்பினர், இந்திய கடல் எல்லையை ஒட்டியுள்ள கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், ‘இது, சர்வதேச கடல் பகுதி. இங்கு மீன் பிடிக்க அனுமதி இல்லை. எனவே, உங்கள் பகுதிக்குச் செல்லுங்கள்’ என ராமேஸ்வரம் மீனவர்களை எச்சரித்துள்ளனர். இதையடுத்து, மீனவர்கள் அவசர அவசரமாக கரைக்கு திரும்பினர்.

அப்போது, தங்கச்சிமடம் அந்தோணியார்புரத்தை சேர்ந்த அமலன் என்பவருக்கு சொந்தமான ஒரு படகையும், அதில் இருந்த மீனவர்கள் ரெனிஸ்டன் (40), முருகேசன் (48), முனியசாமி (55), சுப்பையா (65) ஆகிய 4 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து காங்கேசன் துறைமுகத்துக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் அவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய கடற்படையினர், அவர்களை நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்கள், மீனவர்கள் 4 பேரையும் ஊர்க்காவற்துறை நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மீனவர்கள் 4 பேரையும் அடுத்த மாதம் 16ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு உத்தரவிட்டார். இதையடுத்து, மீனவர்கள் 4 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply