TV

6807407510_87e96e8176_b

திண்டுக்கல், 11.04.19:

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு இலக்குமி நாராயணப் பெருமாள் கோயிலில் இன்று சித்திரைத் திருவிழா திருக்கொடியேற்றத்துடன் துவங்கியது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் முக்கிய உபகோயில் அருள்மிகு இலக்குமி நாராயணப் பெருமாள் கோயில். இக்கோயிலில் இன்று சித்திரைத் திருவிழா திருக்கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று இரவு பலிபீட பூஜை, கங்கணம் கட்டுதல், தேர்க்கு தீர்த்தம் தெளித்தல் போன்றவை நடைபெற்றது. இன்று காலை விக்னஷ்வனேவர் அனுமதி பெறப்பட்டு சங்கு, சக்கரம், திருநாமம், கருடாழ்வார், பூஜைப் பொருட்கள் பொறிக்கப்பட்ட மஞ்சள் நிறக்கொடிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

ஐந்து கலசங்கள் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கொடிப்படம் கோயிலை வலம் வர செய்யப்பட்டது. பின் மேளதாளம் முழங்க செப்புக்கொடி மரத்தில் திருக்கொடி ஏற்றப்பட்டது. கம்பத்துக்கு மாவிலை, தர்ப்பைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் இலக்குமி சமேதர் நாராயணருக்கு சிறப்பு அர்ச்சனைகள், தீபாராதனைகள் நடத்தப்பட்டு திருப்பாவை, திருவெம்பாவை பாசுரங்கள் பாடப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து சுவாமி சப்பரத்தில் நான்கு ரதவீதி உலா எழுந்தருளினார். 10 நாட்கள் நடைபெறும் விழாவை முன்னிட்டு தினமும் சுவாமி சிம்மவாகனம், அனுமார்வாகனம், தங்கக்குதிரை, சேஷவாகனங்களில் நான்குரத வீதிகளில் உலா எழுந்தருள்கிறார். வரவுள்ளார். வரும் ஏப்.17ம் தேதி திருக்கல்யாணமும், ஏப்.19ம் தேதி திருத்தேரோட்டமும் நடைபெறவுள்ளது. கொடியேற்ற நிகழ்ச்சியில் பழனிக்கோயில் இணை ஆணையர் உதவி ஆணையர் செந்தில்குமார், கண்காணிப்பாளர் முருகேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply

Your email address will not be published.