TV

6807407510_87e96e8176_b

சென்னை, 13.04.19:

முன்னாள் எம்பியும், நடிகருமான ஜே.கே.ரித்தீஷ் மறைவுக்கு தினக்காவலன் ஆசிரியர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் முக்கிய பிரமுகராக விளங்கிய முன்னாள் எம்பியும், நடிகருமான ஜே.கே.ரித்தீஷ், தனது சொந்த ஊரான ராமநாதபுரத்தில் திடீர் மாரடைப்பால் இன்று காலமானார். ரித்தீஷ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, தினக்காவலன் ஆசிரியர் வி.எஸ்.முருகநாதன் வெளியிட்ட அறிக்கை:

அன்புக்குரிய உறவினரும், என் மீது அளப்பரிய பற்றும், மரியாதையும் கொண்டிருந்தவருமான முன்னாள் எம்பியும், நடிகருமான ஜே.கே.ரித்தீஷ், திடீர் மாரடைப்பால் அகால மரணம் அடைந்து விட்டார் என்ற செய்தி என்னை உலுக்கி விட்டது.
மிகவும் குறுகிய காலத்தில் அரசியலிலும், திரைத்துறையிலும் தனி முத்திரை பதித்தவர் ரித்தீஷ். எனக்கு நெருங்கிய உறவினர் என்றாலும் கொள்கை ரீதியில் எங்களுக்குள் நேர் எதிர் காலங்களும் உண்டு. அந்த காலக்கட்டங்களிலும் என் மீது அளப்பரிய மரியாதையும், நேசமும் கொண்டிருந்தவர். அவர் மீது நான் கொண்டிருந்த அக்கறையை, பாசத்தை தெளிவாக உணர்ந்து மெய் சிலிர்த்தவர். நான் சொல்லும் எந்த கருத்தையும், அது எதிர்மறையாக இருந்தாலும் சிறிதும் தயக்கமின்றி ஏற்றுக்கொண்டு என்னை நெகிழ வைத்த பண்பாளர்.

அறியாதவர்களுக்கு அவர் கரடு முரடு. அறிந்தவர்களுக்கு அவர் ஒரு தெய்வக்குழந்தை. அந்தக் குழந்தை இன்று இந்த உலகை விட்டு சென்று விட்டது. இத்தனை சீக்கிரத்தில் செல்லும் என்று கனவிலும் நினைக்கவில்லை. காலனின் கணக்கும், காலத்தின் தீர்ப்பும் சூட்சுமம்தானே.
ரித்தீஷ் மறைவு அவரை நேசிக்கும் பலருக்கும், அவர் சார்ந்திருந்த அதிமுக இயக்கத்துக்கும், திரையுலகுக்கும் பேரிழப்பு.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், அதிமுகவினர், திரைத்துறையினர் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் ஆன்மா, இறைவன் திருவடி நீழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

இவ்வாறு, இரங்கல் செய்தி அறிக்கையில் தினக்காவலன் ஆசிரியர் வி.எஸ்.முருகநாதன் குறிப்பிட்டுள்ளார்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply

Your email address will not be published.