TV

6807407510_87e96e8176_b

ராமநாதபுரம், 13.04.19:

அதிமுகவின் முன்னாள் எம்.பியும், நடிகருமான ஜே.கே.ரித்தீஷ் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது மறைவு திரையுலகினரையும், அரசியல் கட்சியினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதிமுகவின் முக்கிய பிரமுகரான ஜே.கே.ரித்தீஷ், ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்  நயினார் நாகேந்திரனுக்காக பிரச்சாரம் செய்ய தனது சொந்த ஊரான ராமநாதபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் இருந்து தேர்தல் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார்.  இந்நிலையில் இன்று அவர் தனது இல்லத்தில் இருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.  அப்போது அவரது மனைவி அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக  தெரிவித்து உள்ளனர். இவர் ஏற்கெனவே 2016ல் சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று பயிற்சியில் ஈடுபட்ட போது,  திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மேலும் கானல் நீர் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இவர், நாயகன் பெண்சிங்கம், எல்கேஜி ஆகிய படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான எல்கேஜி திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இதுவே இவரது கடைசி படமாக அமைந்தது.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply

Your email address will not be published.