TV

6807407510_87e96e8176_b

கொல்கத்தா, 14.04.19:

ஐபில் தொடரின் இன்றை போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

இதுவரை 7 போட்டிகளில் ஆடியுள்ள சென்னை அணி 6 ல் வென்று, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ஆனால் பந்துவீச்சில் சிறப்பாக செயல்படும் சென்னை அணி பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வருகிறது. இந்த போட்டியில் அந்த குறை தீர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை, டெல்லி அணிகளிடம்  கடந்த இரண்டு போட்டிகளில் தொடர்ந்து தோல்வியை சந்தித்த கொல்கத்தா அணி இந்த போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மேலும் சொந்த மண்ணில் ஆடுவது அந்த அணிக்கு கூடுதல் பலமாகும்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply