TV

6807407510_87e96e8176_b

கோவை, 14.04.19:

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகருக்கு 2 டன் பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது.

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது . ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் சிலை உள்ள கோவை புலியகுளம் பகுதியில் உள்ள முந்தி விநாயகருக்கு தமிழ் புத்தாண்டைமுன்னிட்டு 2 டன் பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இன்று தமிழ்புத்தாண்டு முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்ட நிலையில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து சென்றனர்.

அதிகாலையில் இருந்தே சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டதை தொடர்ந்து, முற்றிலும் பழங்கள் மற்றும் காய்கறிகளும் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது. டன் கணக்கில் பழங்கள் மற்றும் காய்கறிகளை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு இருந்த விநாயகரை பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர் . தொடர்ந்து மாலை வரை சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply

Your email address will not be published.