TV

6807407510_87e96e8176_b

கோவை, 14.04.19:

கோவையில் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு காட்டூர் மாரியம்மனுக்கு பணத்தால் அலங்காரம் செய்யப்பட்டிருந்ததை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தரிசனம் செய்து வழிபட்டனர். தேர்தல் கட்டுப்பாடுகளின் காரணமாக மொத்த பணத்தின் மதிப்பை கோயில் நிர்வாகிகள் கூற மறுத்தனர்.

தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கோவை காட்டூரில் அமைந்திருக்கும் மாரியம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் பண அலங்காரம் மற்றும் தங்கம், வைரத்தால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அம்மனை ஆயிரக்கணக்கான மக்கள் தரிசித்து வழிபட்டனர். புத்தாண்டு தினத்தில் மக்கள் பணம் மற்றும் நகைகளுடன் அலங்கரிக்கப்பட்டிருக்கும் அம்மனை தரிசனம் செய்யும் போது, அனைத்தும் வளங்களும் கிடைக்கும் என்ற ஐதீகத்தின் அடிப்படையில் வருடந்தோறும் இந்த அலங்காரம் செய்யபப்ட்டு வருவதாக கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மேலும் கோவிலின் முகப்பில் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு உள்ள சூழலில், கோயிலில் அம்மனுக்கு அலங்காரம் செய்யபப்ட்டு இருந்த மொத்த பணத்தின் மதிப்பை நிர்வாகிகள் கூற மறுத்தனர். இருப்பினும் வருடந்தோறும் இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் இந்த அம்மனுக்கு அலங்காரம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply