TV

6807407510_87e96e8176_b

கோவை, 14.04.19:

பெண்கள் மற்றும் திருநங்கைகள் பிரத்யேகமாக ஓட்டுனராக பணிபுரியும் எம்.ஆட்டோ சேவை கோவையில் தொடங்கப்பட்டது.

கோவை சரவணம்பட்டியில் பெண்கள் மற்றும் திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் விதமாக எம்.ஆட்டோ சேவை துவக்கப்பட்டுள்ளது. செயலி மற்றும் கால் சென்டர் மூலம் இயங்கும் இந்த ஆட்டோக்களில் பெண்களுக்கு என்று பெண் ஆட்டோ ஓட்டுனர்களும், ஆண்களுக்கு என்று ஆண் ஆட்டோ ஓட்டுனர்களும், திருநங்கைகளுக்கு தனியாக திருநங்கைகள்  ஆட்டோ ஓட்டுனர்களும் இயக்கும் எம்.ஆட்டோ சேவை தொடங்கப்படுகிறது.

ஆயிரம் ஆட்டோக்களுடன் துவக்கப்பட்டுள்ள இந்த எம்.ஆட்டோ நிறுவனம் வரும் 3 மாதங்களுக்குள் பத்தாயிரம் ஆட்டோக்களாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் குறைந்த கட்டணமாக 1.08 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூபாய் 30 என நிர்ணயிக்கப்பட்டது. அதற்கு மேல் பயணம் செய்யும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூபாய் 16 கூடுதலாக வசூலிக்கப்படும்.

இது குறித்து எம்.ஆட்டோ நிறுவனத்தின் உரிமையாளர் மன்சூர் அலிகான் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘தற்கால சூழ்நிலையில் தமிழகத்தில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் வேலைக்குச் செல்ல வேண்டிய அவசியம் உள்ளது. பேருந்தில் பெண்கள் பயணம் செய்யும்போது பல்வேறு கஷ்டங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதை கருத்தில் கொண்டு பெண்கள் மற்றும் திருநங்கைகள் பாதுகாப்பான முறையில் பயணம் செய்ய எம்.ஆட்டோ நிறுவனம் புதிய முயற்சியை எடுத்துள்ளது’ என தெரிவித்தார்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply

Your email address will not be published.