TV

6807407510_87e96e8176_b

பனப்பாக்கம், 15.04.19:

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெமிலியை அடுத்த வெளிதாங்கி கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (52). இவருடைய மகள் அனுசுயா (23). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மகேந்திரவாடி கிராமத்தை சேர்ந்த தென்னரசு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களுக்கு 9 மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் தென்னரசு வேலைக்கு செல்லாமல் மனைவி அனுசுயாவிடம், அவருடைய பெற்றோர் வீட்டுக்கு சென்று ரூ.50 ஆயிரம் பணம் மற்றும் மோட்டார் சைக்கிள் வாங்கி வா என்று கூறி தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் அனுசுயா மனமுடைந்து காணப்பட்ட நிலையில், திடீரென நேற்று முன்தினம் அனுசுயாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் காஞ்சீபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அவருடைய தாயார் ஜீவாவிற்கு, தென்னரசு தகவல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று காலையில் அனுசுயா இறந்து விட்டதாக தகவல் அறிந்தத அவருடைய தாயார் ஜீவா, மருத்துவமனைக்கு வந்து பார்த்தபோது அனுசுயாவின் கழுத்தில் தழும்பு இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வரதட்சணை கேட்டு தொல்லை கொடுத்ததால் அனுசுயா தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து விட்டு, உடல்நிலை சரியில்லை என்று கூறி தென்னரசு நாடகமாடுவதாக பாணாவரம் போலீசில் புகார் செய்தார்.

மேலும் அனுசுயாவின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி போலீசில் புகார் அளித்துள்ளாா. ஆனால் இந்த புகார் மீது  போலீசார் எந்த நடவடிக்கை எடுக்காததால் அனுசுயாவின் உறவினர்கள் பாணாவரம் ரெயில்வே மேம்பாலம் அருகில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில்,  இதுபற்றி தகவல் அறிந்ததும் பாணாவரம் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது புகார் மனு அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ராணிப்பேட்டை உதவி கலெக்டர் விசாரணை நடத்த உள்ளார் என்று தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply