TV

6807407510_87e96e8176_b

புதுச்சேரி, 15.04.19:

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 60 நாட்களுக்கான மீன்பிடித் தடைக்காலம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

மீன்களின் இனப்பெருக்கக் காலமான ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரையிலான 60 நாட்கள் கிழக்கு கடலோரப் பகுதியில் விசைப் படகு மீனவர்கள் மீன்பிடிக்க தடைவிதித்துள்ளது. நள்ளிரவு முதல் அமலுக்கு வந்ததால் சென்னை நீலாங்கரை முதல் குமரி மாவட்டம் குளச்சல் வரையிலான கிழக்கு கடற்கரை துறைமுகங்களில் உள்ள 13 மீன்பிடி மாவட்டங்களைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் தங்களின் படகுகளை கரையோரம் நிறுத்தி வைத்துள்ளனர்.

இந்த காலகட்டத்தில் மீனவர்கள் படகுகள், வலைகள் மற்றும், மீன்பிடி உபகரணங்களை பாதுகாக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மீன்பிடி தடைகாலங்களில் அரசு மீனவ குடும்பத்திற்கு வழங்கும் 5 ஆயிரம் ரூபாய் நிவாரண தொகையை 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கவேண்டும் என நாகை மாவட்ட மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தமிழகத்தில் 5 ஆயிரத்து 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியில் கனகசெட்டிக்குளம் முதல் மூர்த்திக்குப்பம் வரையிலும், விசைப்படகுகளைக் கொண்டு மீன்பிடிப்பது முற்றிலும் தடை செய்யப்படுகிறது. 300 க்கும் மேற்பட்ட படகுகள் தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகம் மற்றும் கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 4 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன்பிடி தொழிலாளர்களும், 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மீன்பிடி சார்பு தொழிலாளர்களும் வேலை இழந்துள்ளனர்



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply