TV

6807407510_87e96e8176_b

மும்பை, 15.04.19:

இங்கிலாந்தில் நடக்கும் 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அணியில் தினேஷ் கார்த்திக்குக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

2019 ம் ஆண்டு உலககோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெறவுள்ளது. வரும் மே 30 ல் தொடங்கும் இந்த தொடர் ஜூன் 14, 2019 வரை நடக்கவுள்ளது. மொத்தம் 48 போட்டிகள் 12 நகரங்களில் நடக்கிறது. 1992ல் பென்சன் மற்றும் ஹெட்ஜ்ஸ் உலக கோப்பை முறையில் நடக்கவுள்ள இந்த தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இலங்கை அணிகள் முதல் 8 அணிகள் என்ற தர வரிசைப்படி தகுதி பெற்றுள்ளன. மேற்கிந்திய தீவுகள் அணியும், ஆப்கானிஸ்தான் அணியும் தகுதிச்சுற்று மூலமும் தேர்வு செய்யபட்டது.

இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. அனைவரும் எதிர்பார்த்து இருந்தது போலவே விராட் கோலி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

அணி விவரம்:

விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், கே.எல்.ராகுல், விஜய் சங்கர், தோனி (விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், சகால், ஜஸ்பிரீத் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது சமி, ரவிந்திர ஜடேஜா.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியில் ஐசிசி, அனுமதி இல்லாமலேயே வரும் மே 23ம் தேதி வரை பிசிசிஐ மாற்றம் செய்து கொள்ள முடியும்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply