TV

6807407510_87e96e8176_b

மும்பை, 15.04.19:

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை 2019 போட்டிக்கான இந்திய அணி  இன்று அறிவிக்கப்படவுள்ள நிலையில், அணியில் 4-ஆம் நிலை பேட்ஸ்மேன் இடத்தில் யார் இடம் பெறுவார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

2019 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணி இன்று தேர்வு செய்யப்பட உள்ளது. தேர்வாளர் குழுத் தலைவர் எம்எஸ்கே.பிரசாத், பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, கேப்டன் கோலி ஆகியோர் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. அதன் பின்னர் இந்திய அணியில் தேர்வாகும் வீரர்கள் அறிவிக்கப்படும்.

தொடக்க வரிசையில் ரோஹித் சர்மா, ஷிகர் தவன் ஆகியோர் இடம்பெறுவது உறுதியாகிவிட்ட நிலையில், மூன்றாம் நிலையில் கேப்டன் விராட் கோலி ஆடுவது வழக்கமான ஒன்று. இந்நிலையில், இந்திய அணியில் 4-ஆம் நிலை பேட்ஸ்மேன் சிக்கலாக உள்ள நிலையில், அம்பதி ராயுடு இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆஸி. நியூஸி தொடரில் ராயுடு சரியாக விளையாடவில்லை. மேலும் ராயுடுவுக்கு போட்டியாக ரஹானே, ஷிரேயஸ் ஐயர், தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர், ஆகியோர் வரிசையில் உள்ளனர்.

இதற்கிடையே ரிஷப்பந்த்தை நான்காம் நிலையில் களமிறக்க கங்குலி ஆலோசனை கூறியுள்ள  மிடில் ஆர்டரில் கேதார் ஜாதவ், தோனி ஆகியோர் இடம் பெறுகின்றனர். ஆல்ரவுண்டர் பட்டியலில் விஜய் சங்கர், ஹார்திக் பாண்டியா ஆகியோர் உள்ளனர். 3 ஆல்ரவுண்டர்கள் தேர்வு செய்யப்பட்டால் ரவீந்திர ஜடேஜாவும் இடம்பெறலாம். வேகப்பந்து வீச்சாளர்கள் இடத்துக்கு பும்ரா, புவனேஸ்வர்குமார், ஷமி ஆகியோர் இடம் பெறுவர். சுழற்பந்து வீச்சில் குல்தீப் யாதவ், சஹல் சேர்க்கப்படுவர். நான்காவது வேகப்பந்து வீச்சாளர் தேர்வு செய்யப்பட்டால் நவ்தீப் சைனி, தீபக் சஹார், இஷாந்த் சர்மா ஆகியோர் போட்டியில் உள்ளனர்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply