TV

6807407510_87e96e8176_b

சென்னை, 16.04.19:

மக்களவை தேர்தலை முன்னிட்டு இன்று முதல் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் விடுமுறை விடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 39 நாடாளுமன்ற தொகுதி மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 18 ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இன்று முதல் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.  இன்று முதல் 18ம் தேதி வரையில் 3 நாட்கள் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் அதை ஒட்டி செயல்படும் பார்களை மூடுமாறு டாஸ்மாக் நிர்வாகமும், தேர்தல் ஆணையமும் உத்தரவிட்டது. அதன்படி, இன்று முதல் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளும், பார்களும் மூடப்படுகிறது.

இதனால், கடந்த சில நாட்களாகவே குடிமகன்கள் ஏராளமான மதுவகைகளை வாங்கி பதுக்கிவைத்து வந்தனர். குறிப்பாக, நேற்று கடைசி நாள் என்பதால் காலை 9 மணியில் இருந்தே டாஸ்மாக் கடைகளுக்கு முன்பாக குடிமகன்கள் காத்திருந்து மதுவகைகளை வாங்க வந்தனர். பல இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதற்கு முன்பாகவே குடிமகன்கள் குவிய தொடங்கியதால் பல இடங்களில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ஏற்கனவே, ஒரு நபருக்கு 2 பாட்டில்களுக்கு மேல் மதுவகைகள் தரக்கூடாது என்று டாஸ்மாக் நிர்வாகம், கடை ஊழியர்களுக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால், அதை மீறி பல இடங்களில் குடிமகன்களுக்கு அதிக அளவிலான மதுவகைகள் விற்பனை செய்யப்பட்டது.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply