TV

6807407510_87e96e8176_b

மும்பை, 16.04.19:

ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் மும்பை அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரின் 31வது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலன்ஜர்ஸ் பெங்களூரு அணியும், ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூரு அணயின் தொடக்க ஆட்டக்காரர் கேப்டன் கோலி 8 ரன்களில் வெளியேற, பார்திவ் பட்டேலும்  28 ரன்களுடன் வெளியேறினார். இதனையடுத்து களமிறங்கிய ஏபி டி வில்லியர்ஸ், மோயின் அலி ஆகியோரின் அதிரடி ஆட்டதால் பெங்களுரு அணிக்கு ரன்களை குவித்தது. அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த டிவில்லியர்ஸ் 75 ரன்களும், மொயின் அலி 50 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் பெங்களூர் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. மும்பை அணி தரப்பில் மலிங்கா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி ஆரம்பம் முதலே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கேப்டன் ரோகித் சர்மா 28 (19 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்)ரன்களிலும், குயின்டான் டி காக் 40 (26 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்)ரன்களிலும், இஷான் கிஷன் 21 (9 பந்துகளில் 3 சிக்சருடன்) ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 29 (23 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) ரன்களிலும், குருணல் பாண்ட்யா 11 (21 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன்) ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

இதனையடுத்து களறமிங்கிய ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக ஆடி 16 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் 37 ரன்கள் குவித்து வெற்றி பெற வைத்தார். 19 ஓவர்களில் மும்பை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பெங்களூரு அணி தரப்பில் யுஸ்வேந்திர சாஹல், மொயீன் அலி தலா 2 விக்கெட்டும், முகமது சிராஜ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

8-வது ஆட்டத்தில் ஆடிய மும்பை அணி பெற்ற 5-வது வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 3 வது இடத்தில் உள்ளது. ஆனால் 8-வது ஆட்டத்தில் ஆடிய பெங்களூரு அணி  7 தோல்விகளை சந்தித்துள்ளது.  இந்த தோல்வியின் மூலம் பெங்களூரு அணியின் ‘பிளே-ஆப்’ சுற்று வாய்ப்பு கேள்விக்குறியாகி உள்ளது.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply

Your email address will not be published.