TV

6807407510_87e96e8176_b

கோவை, 16.04.19:

இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளான கோவை, தெற்கு தொகுதிக்கு உட்பட்ட, உக்கடம், டவுன்ஹால், கோட்டைமேடு ஆகிய பகுதிகளில் அ.மு.மு.க வேட்பாளர் அப்பாதுரையை ஆதரித்து வாக்கு சேகரிக்கும் பணி நடைபெற்றது.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்கு சேகரிப்பின் இறுதி நாளான இன்று 82 வது வார்டு வட்டச் செயலாளர் ஜபருல்லா இணைச் செயலாளர் முஹம்மது ஜுபைர் தலைமையில் நடைபெற்ற இதில், கலந்து கொண்ட அ.மு.மு.க.வினர் இஸ்லாமியர்களின் நலன்களை பாதுகாக்க அ.மு.மு.க கட்சியை சேர்ந்த அப்பாதுரைக்கு பரிசுப்பெட்டக சின்னத்தில் வாக்களிக்க கோரி வாக்குகள் சேகரித்தனர்.

மேலும் சாலைகள் அனைத்தும் சீரமைக்கப்படும் என்றும், குடிநீர் வசதி, என இந்த பகுதிக்கு வேண்டிய அனைத்து கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தி தரப்படும் என கேட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply