TV

6807407510_87e96e8176_b

கோவை, 16.04.19:

கோவையில் 470 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை. அங்கு கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ என்று கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்தார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அரசு ஊழியர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு ஆட்சியர் ராசாமணி கூறியதாவது:

வாக்கு பதிவுக்கான அனைத்து பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன. கோவையில் 3070 வாக்குச்சாவடிகள் உள்ளன. அதில் 470 வாக்குச்சாவடிகள் பதட்டமானதாக அறியப்பட்டு, அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட உள்ளது. மேலும் மைக்ரோ அப்சர்வர்களும் பணியில் அமர்த்தப்படுவார்கள். 1880 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 2014ம் ஆண்டு 68.16% வாக்குகள் பதிவானது.

இந்த தேர்தலில் 100% வாக்குகள் பதிவாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. புதிய வாக்காளர்கள் படியலில் 45 ஆயிரம் பேர் இணைக்கப்பட்டுள்ளனர். 150 பறக்கும் படையினர் களத்தில் உள்ளனர். இதுவரை 12 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டு, அதில் மூன்றே கால் கோடி ரூபாய் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது. பணப்பட்டுவாடா நடக்க இருப்பதாக கூறப்படும் பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு போடப்பட்டுள்ளது. இவ்வாறு ஆட்சியர் கூறினார்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply

Your email address will not be published.