TV

6807407510_87e96e8176_b

புதுடெல்லி, 16.04.19:

தன்னுடைய முழு ஆதரவும் பாஜகவிற்கு தான் என இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா அறிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம், ஜாம்நகரைச் சேர்ந்தவர், இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவீந்திர ஜடேஜா. இவரது மனைவி ரிவாபா, கடந்த மாதம் 3 ஆம் தேதி பாஜகவில் இணைந்தார். இதை தொடர்ந்து, கடந்த வாரம் ஜடேஜாவின் தந்தை அனிருத் சிங் மற்றும் அவரது சகோதரி நைனபா ஆகிய இருவரும் ஜாம்நகர் காங்கிரஸ் வேட்பாளர் முலு கண்டோரியா முன்னிலையில்  காங்கிரசில் தங்களை இணைத்து கொண்டனர்.

இந்நிலையில், ரவீந்திர ஜடேஜா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் என்னுடைய முழு ஆதரவையும் பிஜேபி-க்கு தருவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் பாஜகவில் மனைவி, காங்கிரசில் தந்தை, சகோதரி என ரவீந்திர ஜடேஜா எதிரெதிர் கட்சிகளுக்கு போட்டியாக உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். குஜராத் மாநிலத்தில் மொத்தமுள்ள 26 மக்களவைத் தொகுதிகளுக்கும் வரும் 23 ஆம் தேதி, ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply