TV

6807407510_87e96e8176_b

கோவை, 16.04.9:

கோவை பள்ளி மாணவர்கள் ஸ்கேட்டிங் செய்து நூறு சதவிகித வாக்கு என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரத்தை மேற்கொண்டனர்

கோவை புதூரில் அமைந்துள்ள ஆஷ்ரம்மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி கடந்த பத்தொன்பது ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி மாணவர்கள் மீது அக்கறை காட்டுவது அல்லாமல், சமூக விழிப்புணர்வு சார்ந்த விஷயங்களிலும் சிறப்பாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலின் பொழுது 100 % வாக்குப்பதிவுக்காக விழிப்புணர்வை மேற்கொண்டனர்.

இன்று காலை ஐம்பதிற்கும் மேற்பட்ட ஆஷ்ரம் பள்ளி மாணவர்கள் SKATING RALLY யில் பங்கேற்று பொது மக்களிடையே வாக்கு பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சிறப்புமிக்க இந்த நிகழ்வில் பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஏராளமான பொது மக்கள் பங்கேற்று மக்களிடையே வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பள்ளி மாணவர்கள் மாரத்தான் போட்டி சைக்கிள் பந்தயம் போன்றவற்றை மேற்கொண்டு நிலையில் 100 சதவீத வாக்கு இதனை அடிப்படையாக வைத்து ஸ்கேட்டிங் செய்தது பார்ப்பவர்களுக்கு சற்று வித்தியாசமாக இருந்தது



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply

Your email address will not be published.