TV

6807407510_87e96e8176_b

கோவை, 16.04.19:

கோவையில் நடைபெற்ற இளைஞர் மக்கள் இயக்க துவக்க விழாவில் தமிழர்களின் கலசாரம், பண்பாட்டை விளக்கும் வகையில் வீர விளையாட்டுக்களுடன் கிராமிய நடனங்களும் நடைபெற்றது.

இளைஞர்களை ஒருங்கிணைத்து அரசியலுக்கு அப்பாற்பட்டு பல்வேறு சமூக நலத்தொண்டுகளை செய்து வரும் இயக்கம் இளைஞர் மக்கள் இயக்கம். குறிப்பாக நீர் ஆதாரத்தை பாதுகாப்பது தொடர்பான பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வரும் இதன் கிளைகள் துவக்க விழா கோவை இடையர்பாளையம் பகுதியில் உள்ள நகரத்தார் சமூக அரங்கில் நடைபெற்றது.

கோவை நாட்டிய அகாடமியுடன் இணைந்து நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்  தமிழர்களின் பழங்கால விளையாட்டுகள், கலைகள் மனதை பலப்படுத்தும் பாரம்பரிய விளையாட்டை நினைவு படுத்தும் விதமாக கோவை நாட்டிய அகாடமி மாணவ,மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதில் செய்தியாளர்களிடம் பேசிய இளைஞர் மக்கள் இயக்கத்தின் நிறுவனர் சிவசுரேஷ், நமது நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரங்களை காக்கும் விதமாக நதிகளை இணைப்பது மற்றும் நீர் வள பாதுகாப்பு குறித்து இளைஞர்களை ஒருங்கிணைத்து இந்த இயக்கத்தை நடத்தி வருவதாக தற்போது நமது பாரம்பரி கலை மற்றும் விளையாட்டுகள் கொஞ்சம் கொஞ்சமாக வழக்கொழிந்து வருகின்றன எனவும் தெரிவித்தார்.

இருப்பினும் ஒரு சில கிராமங்களில் இன்றும் உயிர்ப்புடன் இருந்து வரும் பாரம்பரிய விளையாட்டுகளை இன்றைய மாணவர்கள் தெரிந்து கொள்ளும் விதமாக இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவதாக தெரிவித்தார்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply

Your email address will not be published.