TV

6807407510_87e96e8176_b

ஈரோடு, 16.04.19:

தனது மனைவியின் நடத்தையில் சந்தேகபட்ட கணவன் மனைவியின் தலையை வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே வேப்பம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முனியப்பன் (28)  சிலிண்டர் போடும் வேலை பார்த்து வரும் இவருக்கு கடந்த 7 மாதத்திற்கு முன்பு நிவேதா(19) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.

முனியப்பன் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு வேலை முடிந்து வீட்டிற்கு வந்த முனியப்பன்   தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் முனியப்பனுக்கும் நிவேதாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் தகராறு அதிகமான நிலையில், முனியப்பன் நிவேதாவிடம், “இது சரிப்பட்டு வராது.. வா.. நான் உன்னை உங்க அம்மா வீட்டில் விட்டு விடுகிறேன்” என்று சொல்லி பைக்கில் அழைத்து சென்றுள்ளார்.

அப்போது எருக்காட்டுவலசு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது கணவன் மனைவிக்கு இடையே திரும்பவும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த முனியப்பன், தன்னிடமிருந்த கத்தியால் திடீரென நிவேதாவின் கழுத்தை அறுத்தார்.  இதில் தலை துண்டாகி விழுந்த நிலையில், நிவேதா சம்பவ இடத்திலேயே பலியானார். இதனையடுத்து முண்டான அந்த தலையை எடுத்து பைக்கின் முன் பக்கம் வைத்து கொண்டு நிவேதாவின் உடலை பைக்கின் பெட்ரோல் டேங்கின் மீது தன் பக்கமாக திருப்பி வைத்துக்கொண்டு பைக்கை படு வேகமாக தெருவில் ஓட்டிக்கொண்டு வந்துள்ளார்.  இதை பார்த்த பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு ஓடினார்கள்.

பைக்கில் வேகமாக வந்த முனியப்பன் ஒரு வீட்டின் சுவரின் மோதி கீழே விழுந்து காயமடைந்தார். அவருடன் சேர்ந்து பைக்கில் இருந்த முண்டமும், தலையும் தனித்தனியாக உருண்டு விழுந்தன. இதை பார்த்து அங்கிருந்தவர்கள் உடனடியாக பெருந்துறை போலீசுக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் முனியப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply

Your email address will not be published.