TV

6807407510_87e96e8176_b

கோவை, 17.0.19

வரும், ஜூலை, 1ல் வேளாண் படிப்புகளுக்கான அகில இந்திய நுழைவுத்தேர்வு நடக்கிறது. தமிழக மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பை தவறாது பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என, தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகம் அறிவுறுத்தியுள்ளது.

கடந்தாண்டு வரை, இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் வாயிலாக நடத்தப்பட்ட வேளாண் படிப்புக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வு, நடப்பாண்டு முதல் தேசிய நுழைவுத்தேர்வுகள் ஒருங்கிணைப்பு ஆணையமான, என்.டி.ஏ.,விடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த நுழைவுத்தோ்வுக்கு வரும் ஏப்., 1 முதல் 30ம் தேதி வரை, ஆன்லை’ மூலம் விண்ணப்பிக்கலாம்.

தேர்வுக்கட்டணம், பொது பிரவினருக்கு 700 ரூபாயும், எஸ்.சி., – எஸ்.டி மற்றும் திருநங்கைகள் உள்ளிட்ட பிரிவினருக்கு, 350 ரூபாயும் நிர்ணையிக்கப்பட்டுள்ளது. மேலும் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களில் பிழைகளை திருத்த, மே 7 முதல், 14 வரை, வாய்ப்பு அளிக்கப்படும். விண்ணப்பிக்கும்போது, இமெயில் மற்றும் தொலைபேசி எண்களை கவனமாக பதிவு செய்ய வேண்டும். இவற்றின் வாயிலாகவே மாணவர்களுக்கு விவரங்கள் அனுப்பி வைக்கப்படும்.

வேளாண் படிப்பிற்கு, ஆண்டுதோறும் இந்த நுழைவுத்தேர்வு மூலம் கலந்தாய்வு நடத்தப்பட்டு, 2,000க்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்படுகின்றன. ஆனால், தமிழக மாணவர்கள் மத்தியில், போதிய விழிப்புணர்வு இல்லாததால், பிற மாநில மாணவர்கள் அதிக அளவில் பயன்பெறுவதாக, வேளாண் பல்கலை பேராசிரியர்கள் தெரிவித்தனர்.

அகில இந்திய வேளாண் நுழைவுத் தேர்வை தமிழக மாணவர்கள் அவசியம் எழுத வேண்டும். மாதம், 3,000 ரூபாய் ஊக்கத்தொகையுடன் பட்டப்படிப்பை முடிக்கலாம். நாடு முழுவதும், 75 வேளாண் பல்கலைகள் உள்ளன. பல்கலையின் மொத்த இடங்களில், 15 சதவீதம் அகில இந்திய இடஒதுக்கீட்டின் கீழ் மாணவர்கள் சேர்க்கப்படுவர்.

வேளாண் படிப்பில் சேர திட்டமிட்டுள்ள தகுதியான மாணவர்கள் அனைவரும் இத்தேர்வை எழுதலாம்.விண்ணப்பிக்கும் முறை, இடஒதுக்கீடு விபரங்களை, www.ntaicar.nic.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply