TV

6807407510_87e96e8176_b

கோவை, 19.04.19:

கோவையில் பிரசித்தி பெற்ற தர்மலிங்கேஸ்வரர் மலைக்கோவிலில் நடைபெற்ற சித்ரா பௌர்ணமி கிரிவலத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கோவை, மதுக்கரை மரப்பாலம் பகுதியில், தர்மலிங்கேஸ்வர மலை அமைந்துள்ளது. மலைமேல் மருந்தாக இறைவன் சுயம்புலிங்க வடிவில் வீற்றிருந்து அருள் பாலிக்கிறார். சித்தர்கள் தங்கி வழிபட்ட சிறப்புடைய,இக்கோவிலில், சித்ரா பவுர்ணமி கிரிவலம், மலைப்பாதையில் புதிதாக கட்டப்பட்ட இளைப்பாறும் மண்டபங்கள் மற்றும் குடிநீர் தொட்டி திறப்பு,ஆன்றோர்களுக்கு விருது வழங்குதல் ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

கோவில் தர்மகர்த்தா குழுவினர் கிருஷ்ணசாமி,கே.பி.செல்வராஜ் மற்றும் திருமூர்த்தி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், முன்னதாக அடிவாரத்திலுள்ள ராஜகோபுரம், விநாயகர், முருகன், ஐயப்பன், ஒன்பான்கோள்கள், விமானம், மூலமூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.தொடர்ந்து புதிதாக கட்டப்பட்ட இளைப்பாறும் மண்டபங்கள் மற்றும் குடிநீர் தொட்டிகளை அமைச்சர் வேலுமணி திறந்து வைத்தார். பின்னர் நடைபெற்ற சித்ரா பௌர்ணமி கிரிவலத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply