TV

6807407510_87e96e8176_b

சென்னை, 19.04.19:

சிவகார்த்தியேன் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள மிஸ்டர் லோக்கல் படம் மே 17 ம் தேதி வெளியாகும் என அதிகாராபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சீமராஜப படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் மஸ்டர் லோக்கல். நயன்தாரா நாயகியாக நடித்துள்ள இந்த படத்தை இயக்குனர் ராஜேஷ் எம் இயக்கியுள்ளார். இத்திரைப்படம் மே 1ஆம் தேதி அஜித் பிறந்த நாளில் வெளியாகும் என இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஸ்டுடியோக்ரீன் புரடொக்சன்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.

ஆனால் கடந்த சில நாட்களாக வெளிவந்த இந்த படத்தின் விளம்பத்தில் ரிலீஸ் தேதி குறித்த தகவல் எதுவும் இல்லாததால், படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போக வாய்ப்பு இருக்கலாம் என கருதப்பட்டது. இந்நிலையில் மிஸ்டர் லோக்கல்’ திரைப்படம் வரும் மே 17ஆம் தேதி வெள்ளியன்று வெளியாகு என சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ராதிகா, யோகிபாபு, சதீஷ், ஆர்ஜே பாலாஜி, பிரகாஷ்ராஜ், ரோபோ சங்கர், ஆனந்த்பாபு, சுமன் உள்பட பலர் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் கார்த்தி, ஆர்யா, ஜீவா, உதயநிதி மற்றும் ஜிவி பிரகாஷ் ஆகியோர் சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளனர்.

இந்நிலையில் மே 17ஆம் தேதி இந்த படத்தை வெளியிட திட்டமிட்டிருப்பதால், அன்றையதினம் வெயாகவிருந்த ‘கொலைகாரன்’ உள்ளிட்ட ஒருசில படங்களின் ரிலீஸ் தேதி தள்ளிப்போகுமா? என கேள்வி எழுந்துள்ளது.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply