TV

6807407510_87e96e8176_b

கோவை, 19.04.19:

கோவை அவினாசி சாலை உப்பிலிபாளையம் மேம்பாலம் அருகிலுள்ள அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோவிலில் சித்திரை பெருந்திருவிழாவை முன்னிட்டு 3ஆம் நாளான இன்று அக்னி கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.  பூ மற்றும் அக்னி கம்பத்துடன் அம்மன் கோவிலை வலம் வந்து அக்னி கம்பம் நடும் விழா நடைபெற்றது.

3 ஆண்டுகளாக கோவில் விழா நடைபெறாத நிலையில், இன்று வெகு விமர்சையாக அம்மன் திருவிழா நடந்ததையடுத்து, கோவையில் மழை கொட்டி தீர்த்தது பக்தர்களை பரவசப்படுத்தியது. திருவிழாவை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பக்தர்கள் அம்மனை வழிபட்டு சென்றனர். முக்கியமான அவினாசி சாலையில் கோவில் திருவிழா நடைபெறுவதை அடுத்து 30க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply