TV

6807407510_87e96e8176_b

கோவை, 21.04.19:

கோவை காந்திபுரம் சிஎஸ்ஐ தேவாலயத்தில் கிருத்துவர்கள் ஈஸ்டர் பண்டிகையை  உற்சாகமாக கொண்டாடினர்.

சிலுவையில் அறையப்பட்ட இயேசு பிரான் மூன்று நாட்களுக்கு பிறகு உயிர்தெழுந்த நாளினை ஈஸ்டர் பண்டிகை நாளாக இன்று உலகம் முழுவதும் உள்ள கிருஸ்துவ மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். இந்நிலையில் ஏசுபிரான் மீண்டும் உயிர்த்தெழுந்ததை வரவேற்கும் விதமாக நோன்பிருந்து கொண்டாடும் பண்டிகை ஈஸ்டர் திருநாளாகும். அகத்தின் மரணத்தை வென்று நிஜ வாழ்வின் தாத்பர்யத்தை விளக்கும் உயிர்த்தெழுதலின் அஞ்ஞானத்திலிருந்து விடுதலை பெற்று ஆன்மீக சுயத்தை உணர்த்திய சாகாவரம் இந்த நாளை அனைவருமே கொண்டாடுகின்றன.

ஈஸ்டர் மாதத்தில் விரதம் இருக்கும் கிருஸ்துவ மக்கள் தாங்கள் விரதகாலத்தில் செலவழிக்காமல் இருந்த பணத்தை ஏழைகளுக்கு அளிக்கின்றனர். இந்த தினத்தை கொண்டாடும் விதமாக கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள சிஎஸ்ஐ தேவாலயத்தில் இயேசுவிடம் நியாமும், சத்தியமும் என்றைக்கும் மரிப்பதில்லை என்பதை எடுத்துக்காட்டும் விதமாகவே, இயேசு உயிர்தெழுதல் நிகழ்வை கொண்டாடினர். இதில் உயிர்த்தெழுதல் என்பது மனித இனத்துக்குக் கிடைத்த கடவுளின் அன்பளிப்பு என்றும், உயிர்த்தெழவும், மறுபடைப்புக்குத் தயாராகவும் அதில் பங்குபெறவும் மானுடருக்குக் கிடைத்த பரிசு என்றும் அது ஒரு புண்ணாற்றும் இயக்கத்தின் தொடர்ச்சி என்று கிருத்துவர்கள் கர்த்தரை பிரார்த்தினர்.

இதனால் அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியோடு ஈஸ்டர் பண்டிகை கொண்டாட முடிகிறது. இந்த நன்னாளில் அனைவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து இயேசு உயிர்தெழுத்தார் என்று மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply