TV

6807407510_87e96e8176_b

கொழும்பு, 21.04.19:

இலங்கையில் அடுத்தடுத்து 3 தேவாலயங்களில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் பலர் படுகாயம் அடைந்துள்ள நிலையில், மேலும் 3 ஹோட்டல்களிலும் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் 160க்கும் அதிகமானோர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இயேசு சிலுவையில் அறையப்பட்டு, மூன்றாம் நாள் கழித்து உயிர்தெழுந்ததை கொண்டாடும் வகையில் இன்று உலகம் முழுக்க ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடும் கிறிஸ்துவர்கள் நேற்று இரவு தேவாலயங்களில் சென்று வழிபட்டார்கள். அதேபோல் ஞாயிற்றுக் கிழமையான இன்று காலையும் தேவாலயங்களில் சென்று வழிபாடு நடத்தினார்கள்.

இந்தநிலையில் இன்று இலங்கையில் தேவாலயத்தில் மக்கள் வழிபாடு நடத்திக் கொண்டு இருக்கும் போது, அங்கு திடீரென வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றுள்ளது. 3 சர்ச் மற்றும் 3 தனியார் ஹோட்டல்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. கொச்சிக்கடாவில் உள்ள புனித அந்தோனி தேவாலயத்திலும், நீர் கொழும்பில் உள்ள கத்துவாபித்தியா பகுதியிலும் ஒரு தேவலயத்திலும், மட்டக்களப்பு சர்ச் ஆகிய இடங்களில் குண்டுவெடித்துள்ளது. மூன்றுமே கொழும்பில் உள்ள மிக முக்கியமான கிறிஸ்துவ தேவாலயங்கள் ஆகும்.

மேலும் சின்னமன் கிராண்ட் ஹோட்டல், கிங்ஸ்பெரி ஹோட்டல், ஷங்கிரி லா ஹோட்டல்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த குண்டு வெடிப்பில் 200 க்கு மேற்பட்ட நபர்கள் படுகாயம் அடைந்துள்ள நிலையில், அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு இருக்கிறார்கள். குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் இலங்கை ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது.

இந்த குண்டுவெடிப்பிற்கு இதுவரை யாரும் பொறுப்பேற்காத நிலையில், இந்த குண்டுவெடிப்பில் 160க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 250க்கும் அதிகமானோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply