TV

6807407510_87e96e8176_b

ஸ்காட்லாந்து, 21.04.19:

ஸ்காட்லாந்து கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் கான் டி லாங், தனது 38வது வயதில் திடீரென உயிரிழந்தார்.

ஸ்காட்லாந்து கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் கான் டி லாங் (38). தென் ஆப்ரிக்காவில் பிறந்தவர்இவர்,  கடந்த 1998ல் மார்ச் மாதம் முதல்தர கிரிக்கெட்டில் அறிமுகமானர். இதனைத்தொடர்ந்து 2012, 2013ம் ஆண்டுகளில் நார்த்தாம்டன்ஷியர் கவுண்டி கிளப் கிரிக்கெட் அணிக்காக விளையாடினார்.

தொடர்ந்து கடந்த 2015ல் அயர்லாந்து அணிக்கு எதிரான டி-20 போட்டியில் ஸ்காட்லாந்து அணிக்காக அறிமுகமானார். பிறகு 2016ல் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமான இவர், கடைசியாக 2017ல் பப்புவா நியூ கினியா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பங்கேற்றார். இதனிடையே, கடந்த 2018ல் இவரின் மூளையில் கட்டி உள்ளது தெரியவந்தது.

சுமார் ஒரு ஆண்டுக்கு மேலாக அவதிப்பட்டு வந்த கான் டி லாங், நேற்று உயிரிழந்ததை ஸ்காட்லாந்து கிரிக்கெட் போர்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கான் டி லாங்கிற்கு கிளாரி என்ற மனைவியும் டெய்சி மற்றும் ரோரி என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவரின் மறைவுக்கு பல முன்னணி வீரர்கள் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply